பீகார் தேர்தல் முடிவைக் கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டு விட்டதாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் அவர் அளித்த பேட்டியில்,
பீகார் தேர்தல் முடிவைக் கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுவிட்டது என்றும் பீகார் தேர்தலில் NDA கூட்டணி வெற்றி ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று நாராயணன் திருப்பதி குறிப்பிட்டார்.
SIR குறித்து தமிழகத்தில் திட்டமிட்டு எதிர்ப்பும், தவறான விளக்கமும் அளிக்கப்படுகிறது என்றும் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் என்று நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டினார்.
















