தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் நாளைய தினம், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழையும் திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
















