தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு S.I.R படிவங்கள் மறுக்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தவெகவினரை தயார்படுத்தும் வகையில், விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தற்போது நடைபெற்று வரும் S.I.R பணிகளை கட்சியினர் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
அப்போது S.I.R படிவங்கள் தவெகவினருக்கு மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய விஜய், தற்போது ஆட்சியில் உள்ளவர்களும், அவர்களுக்கு கைப்பாவையாக உள்ள சிலரும் இதனை செய்வதாக குறிப்பிட்டார்.
மேலும், இதனை சாதாரணமாக கருதக் கூடாது என எச்சரித்த விஜய், எல்லோருக்கும் S.I.R படிவம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
குறிப்பாக முதன்முறை வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்த விஜய், GenZ கிட்ஸ்தான் இந்த தேர்தலில் மிகவும் முக்கியமானவர்கள் என்றும் கூறினார்.
















