சர்வதேச நாடுகள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடுவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீனதயாள் ஸ்மிருதி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மோகன் பாகவத், சில சக்திவாய்ந்த நாடுகள், பலவீனமான நாடுகள் மீது அதிகாரத்தைத் திணிப்பதாகக் கூறினார்.
தேசியவாதத்தின் காரணமாகவே போர்கள் நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், சர்வதேசம் பற்றி பேசுபவர்கள், தங்களது நாட்டின் நலனை முதன்மையாக கருதுவதைப் பார்க்க முடிவதாக தெரிவித்தார்.
உலக மக்கள் தொகையில் 4 சதவிகிதம் பேர், உலகின் 80 சதவிகித வளங்களை பயன்படுத்துவதாகவும், இது வளர்ந்த மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறது என்றும் மோகன் பாகவத் கூறினார்.
இந்தியா எப்போதும் பன்முகத் தன்மையை கொண்டிருப்பாகக் குறிப்பிட்ட அவர், இந்தியா ஒருபோதும் மோதலுக்கு ஒரு காரணமாக இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.
















