குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி கிடைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தங்களது சொந்த செலவில் சங்கத்தை நடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், தங்களது சொந்த வாழ்க்கையில் உள்ள செலவுகளை குறைத்து சேமித்த பணத்தை சங்கத்திற்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக பேசிய அவர், இந்தியா அங்குலம் அங்குலமாக வளர்வதற்கு பதிலாக, மைல் மைலாக வளர்ந்து வருவதாகவும், உலகளவில் இந்தியா நற்பெயரை கொண்டுள்ளதாகவும் பெருமிதத்துடன் கூறினார். உலகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு பதில்களை வழங்க இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















