சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை தொடங்கியுள்ள நிலையில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் மண்டல கால பூஜை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பூஜை இன்று முதல் தொடங்கியுள்ளது.
புதிய மேல்சாந்திகள் மற்றும் தந்திரி கண்டரரு ஆகியோர் வேதமந்திரங்கள் ஓதிய நிலையில் கோயில் நடையை திறந்து வைத்தனர்.
அப்போது சரண கோஷம் எழுப்பப்பட்டு சுவாமிக்கு மண்டல கால பூஜைகள் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நிர்மால்ய பூஜை, கணபதி ஹோமம் மற்றும் நெய்யபிஷேகம் உள்ளிட்டவை செய்யப்பட்ட நிலையில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
















