பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண்மணி ஒருவரை திமுக பிரமுகர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் பழனி கோயிலுக்கு வரும் சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையொட்டி மலை அடிவாரம் மற்றும் கிரிவீதி பகுதிகளில் சாலையோர கடைகள் அமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, கடை அமைப்பது தொடர்பாகப் பெண் ஒருவருக்கும், திமுக முன்னாள் நகர செயலாளர் தமிழ்மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த தமிழ்மணி, பெண்மணியைக் கன்னத்தில் தாக்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















