கேரளா மாநிலம் கண்ணூரில் பணிகள் நிறைவடையாத பாலத்தில் சென்ற கார் விபத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கண்ணூரில் தேசிய நெடுஞ்சாலைக்கான பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோழிக்கோட்டில் இருந்து கண்ணூருக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
தொடர்ந்து தடை செய்யபட்ட பகுதி வழியாக ஓட்டுனர் அத்துமீறிக் காரை இயக்கியுள்ளார். அப்போது கார் பாலத்தின் இடைவெளியில் சிக்கி விபத்துக்குள்ளானது.
தொடர்ந்து அந்தரத்தில் தொங்கிய காரில் ஓட்டுநர் சிக்கித் தவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரில் சிக்கித் தவித்த ஓட்டுநரைப் பத்திரமாக மீட்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















