கடும் நெருக்கடிகளை உடைத்து கர்நாடக அமைச்சர் பிரியங்க் மல்லிகார்ஜுன் கார்கேவின் சொந்த தொகுதியான சித்தாபூரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் வெற்றிகரமாக நடைபெற்றது.
கர்நாடகாவில் அரசு மற்றும் பொது இடங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கடந்த மாதம் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதினார்.
இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தங்களது பலத்தை வெளிக்காட்டும் வகையில் பிரியங்க் கார்கேவின் சொந்த தொகுதியான சித்தாபூரில் கடந்த மாதம் 19ம் தேதி அணிவகுப்பு நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்தது. ஆனால் அதற்கு அரசு அனுமதி வழங்காத நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிமன்றம், சித்தாபூரில் அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து அரசின் நெருக்கடிகளை உடைத்து பிரியங்க் கார்கேவின் சொந்த தொகுதியிலேயே ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பாரத் மாதாகி ஜெ என முழக்கமிட்டபடி ஊர்வலமாகச் சென்றனர்.
















