பிரதமரின் வருகையை ஒட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாகக் கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களைப் போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, கோவை மாநகர் முழுவதும் 3 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்தநிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாகக் கோவை சர்வதேச விமானநிலையத்தில் இன்றும், நாளையும் கார்களைப் பார்க்கிங் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உரிமையாளர்களால் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த கார்களை, மீட்பு வாகனங்கள்மூலம் போக்குவரத்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
















