தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, நாமக்கல்லில் மானிய விலை நிலக்கடலை விற்பனை மோசடி செய்த புகாரில் வேளாண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில், உமா மகேஷ்வரி என்பவர், உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
இவர் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டிய நிலக்கடலையை, வெளிநபர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக இளம் விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். இதையெடுத்து உமா மகேஸ்வரி புதுச்சத்திரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் விவசாய சங்க பிரமுகர் செளந்தரராஜனை சமாதானம் செய்வதற்காக, வேளாண் அதிகாரி உமாமேகேஷ்வரி பேரம் பேசிய ஆடியோ வெளியானது.
இதனை தமிழ் ஜனம் தொலைக்காட்சி ஆதாரத்துடன் செய்தியாக ஒளிபரப்பியது. இதையடுத்து உமாமகேஷ்வரியை மீண்டும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து, வேளாண்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
















