இலங்கையில் தமிழக மீனவர்களின் கை, கால்களில் விலங்கிட்டது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை, அந்நாட்டு சிறைத்துறை அதிகாரி மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 3-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அதில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மீனவருக்குக் கை, கால்களில் விலங்கிட்டு சிகிச்சையளித்த வீடியோ கடந்த வாரம் வெளியானது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மீனவர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டனர்.
இதனை அங்கிருந்த தமிழ் ஊடகவியலாளர் வீடியோவாகப் பதிவு செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி, தமிழ் ஊடகவியலாளரின் கேமராவை தட்டிவிட்டு மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















