பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான லம்போர்கினி ஹூராகேன் கார், சுங்கச்சாவடியில் தடுப்புக்கு கீழ் புகுந்து செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
சமீபத்தில், ‘கார்ஸ் லவ்வர்’ என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்ட இந்த வீடியோ, டோல் பிளாசா ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளது.
கருப்பு நிற லம்போர்கினி ஹூராகேன் கார் சுங்கச்சாவடிக்குள் நுழைந்தபோது, ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் தானாகவே செலுத்தப்படும் என்று டோல் ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சுங்கச்சாவடியின் தடுப்பை விட இந்தக் கார் மிகவும் தாழ்வாக இருந்ததால், அந்தக் கார் ஓட்டுநர் தடுப்பிற்கு அடியில் லாவகமாகப் புகுந்து எஸ்கேப் ஆனார்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்றுள்ளது. லம்போர்கினி போன்ற ஒரு விலையுயர்ந்த காரை வைத்திருப்பவர், வெறும் 100 அல்லது 200 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தாமல் சென்றது குறித்து நெட்டிசன்கள் பலத்த விமர்சனம் செய்து வருகின்றனர்.
















