ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியல் சமூக மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் டி பிளாக் அம்மா பூங்கா அருகே செயல்பட்டு வரும் அரசு சமூக நல விடுதியில் தங்கிப் படித்து வரும் பட்டியல் சமூக மாணவரை, சக மாணவர்கள் கொடூரமாகத் தாக்கிய வீடியோ வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
















