திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது.
பூம்பாறை, கிளாவரை, கூக்கால், வெள்ளகவி, பெரியூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.
இப்பகுதிகளில் மழைக்காலங்களில் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்க வேண்டுமெனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















