சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வழக்கத்திற்கு மாறாகப் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதி அடைந்தனர்.
ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டது.
மேலும் குளிர்ந்த காற்று வீசியதாலும், பனிமூட்டத்தாலும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் பிரதான சாலைகளைப் பனிமூட்டம் சூழ்ந்ததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் சென்றனர்.
















