பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தென்காசியில் திமுக நிர்வாகி ஜெயபாலன் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
உலகம் போற்றும் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
திமுக நிர்வாகி பேசும் போது தென்காசி எம்பியும், சங்கரன்கோவில் எம்எல்ஏவும் மௌனம் காத்திருப்பது வன்மத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமிழகத்திற்கு வரும் வேளையில், அவரது பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ள ஜெயபாலனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















