மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்,
பீகாரில், சட்டசபை தேர்தலுக்கு முன் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்த பணிகளால் 60 லட்சம் போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மேற்குவங்கத்தில் தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், போலி வாக்காளர்களாக கண்டறியப்படும் பதிவுகளை ஏஐ உதவியுடன் முகத்தை பொருத்தி பார்த்து அடையாளம் காணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















