தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கனிம வள கொள்ளையில் ஈடுபடும் நபர்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தருமபுரி பாலக்கோடு பகுதிகளில் ரியல் எஸ்டேட், வணிக வளாகக் கட்டிடங்களுக்குத் தேவையான கிராவல் மண், பாறாங்கற்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
வனப்பகுதியில் உள்ள குன்றுகள், மலைகளுக்குச் செல்லும் கொள்ளை கும்பல், டிப்பர் லாரிகளில் கிரவல் மண் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றன.
பாலக்கோடு அடுத்த பெருமாள் பள்ளம் பகுதியில் ஒரு மலையே காணாமல் போயிருப்பதால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் கனிம வள கொள்ளையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















