மதுரையில் சாலையில் சென்ற மகளிர் விடியல் பயண பேருந்தின் படிக்கட்டு உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கொண்டையம்பட்டி பகுதிக்கு மகளிர் விடியல் அரசுப் பேருந்து சென்றது.
அப்போது, திடீரெனப் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதனால், பேருந்தில் பயணித்த நபர்கள் அச்சத்தில் சத்தமிட்டனர். பின்னர் பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பழைய பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டுமெனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















