ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் நீதிபதிகள் 16 பேர் உட்பட நாட்டின் முக்கிய பிரமுகர்கள் 272 பேர் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையைச் சீர்குலைக்கும் வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான விஷமத்தனமான செயல்பாடுகளில் ராகுல் காந்தி ஈடுபடுவதாகக் கண்டனம் தெரிவித்து 16 நீதிபதிகள் உள்ளிட்ட 272 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஹேமந்த் குப்தா உள்ளிட்டோரும் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
அதேபோல் RAW அமைப்பின் முன்னாள் தலைவரான சஞ்சீவ் திருப்பாதி, NIA அமைப்பின் முன்னாள் தலைவரான யோகேஷ் சந்திர மோடி உள்ளிட்டோரும் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
















