கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து திருக்குடை ஊர்வலம் அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள புஷ்பரதேஸ்வரர் கோயிலில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக ஆண்டுதோறும் திருக்குடைகள் அனுப்புவது ஐதீகம்.
அதன்படி, நடப்பாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழாவிற்காகத் திருக்குடைகள் அனுப்பும் வைபவம் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. உற்சவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், விபூதி லிங்கம் மற்றும் ருத்ராட்சலிங்கத்துடன் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
அப்போது, பக்தர்கள் பரவச நடனமாடி ஊர்வலமாகச் சென்றனர். வழிநெடுங்கிலும் உள்ள பக்தர்கள் திருக்குடைகளுக்கு கற்பூரம் ஏற்றிச் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
















