தூத்துக்குடியில் இருந்து பைபர் படகில் இலங்கைக்கு பீடி இலைகள் மற்றும் பெட்ரோல் கடத்திச் சென்ற 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில் நடைபெறும் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமாக வேகமாகச் சென்ற பைபர் படகைச் சுங்கத்துறை அதிகாரிகள் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் படகைச் சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரத்து 500 கிலோ பீடி இலைகள் மற்றும் 8 கேன்களில் இருந்த 400 லிட்டர் பெட்ரோல் ஆகியவற்றை பறிமுதல் செய்து திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
















