தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது.
இதனால் திருச்செந்தூர் போக்குவரத்து பணிமனையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.
இதன்காரணமாகப் பணிமனைக்குள் செல்வதற்கு பணியாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மழைக்காலங்களில் பணிமனை வளாகத்தில் தண்ணீர் தேங்குவதாகவும் இதுகுறித்து நிர்வாகத்திடம் பலமுறை தகவலளித்தும் நடவடிக்கை இல்லையெனவும் ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
















