ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா என்பது உலகளாவிய அமைதி, அன்பு மற்றும் சேவைக்கான திருவிழாவாக மாறி உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இந்தப் பிறந்தநாள் நூற்றாண்டு விழா வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது தெய்வீக ஆசீர்வாதம் எனக் கூறினார்.
சத்ய சாய்பாபா தற்போது தம்முடன் இல்லை என்றாலும், அவரது போதனைகள் மற்றும் அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவை உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துவதாகவும், மனித வாழ்க்கையில் சேவை என்பதை இதயத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், புட்டபர்த்தியின் புனித பூமியில் இருப்பது ஒரு சிறந்த ஆன்மிக அனுபவம் என்றும் சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா என்பது உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் சேவைக்கான திருவிழாவாக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார்.
















