அண்ணாமலையின் தோள்களில் தட்டிக்கொடுத்து அயர்ன்மேன் எனப் பிரதமர் மோடி பாராட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை கொடிசியா மைதானத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாடு தொடங்கியது.
முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, கோவை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அப்போது, கோவாவில் அண்மையில் நடைபெற்ற அயர்ன்மேன் போட்டியில் கலந்து கொண்டு நிறைவு செய்த அண்ணாமலையை அவரின் தோள்களில் தட்டிக்கொடுத்து அயர்ன்மேன் எனப் பிரதமர் பாராட்டினார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
















