தமிழ் ஜனம் செய்தியின் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மண்டியிருந்த புதர்கள் அகற்றப்பட்டன.
சுமார் 1 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட குழித்துறை நகர்ப்புற சுகாதார நிலையம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் திறப்பு விழா காணமால் பூட்டிக் கிடக்கிறது.
இதனால் அந்தப் பகுதி புதர்கள் நிறைந்திருந்ததால் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக நகர்ப்புற சுகாதார நிலைய வளாகத்தில் மண்டியிருந்த புதர்கள் அகற்றப்பட்டன. மேலும், உடனடியாக நகர்ப்புற சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் சுகாதார துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
















