மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக செய்தி வெளியான நிலையில், மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
அதன்படி, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை என்றும், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விளக்கம் மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மெட்ரோ மட்டுமின்றி லைட் மெட்ரோ, பிஆர்டிஎஸ் போக்குவரத்து திட்டங்களுக்கும் விவரம் கேட்கப்பட்டுள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வறிக்கையையும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதகாவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கோவை முதல் கருமத்தம்பட்டி வரையிலும் உக்கடம் முதல் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் அமைக்க திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
















