இயற்கை வேளாண் மாநாட்டின்போது பிரதமரின் பொருளாதார கொள்கைகளை பாராட்டி பதாகை ஏந்தியபடி நின்றிருந்த சிறுமிகளை பிரதமர் மோடி பாராட்டி பதாகையை பெற்றுக்கொண்டார்.
கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்கிய இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கையை பாராட்டி பதாகைகளை ஏந்தியபடி இரு சிறுமிகள் வெகு நேரம் நின்றுகொண்டிருந்தனர். இதை கவனித்த பிரதமர் மோடி, சிறுமிகளின் செயலை பாராட்டினார். பின்னர், சிறுமிகள் வைத்திருந்த பதாகையை பெற்றுக்கொள்ளுமாறு அங்கிருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறுமிகள், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பற்றிய பதாகையை ஏந்தியதாக தெரிவித்தனர். பிரதமர் மோடி தங்களை குறிப்பிட்டு பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
















