பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் போர் விமானங்களின் விற்பனையை தடுக்க சீனா பொய்ப் பிரசாரம் செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இதனை இந்தியா நிராகரித்துவிட்டது. இந்நிலையில் அமெரிக்கா- சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா – பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து, ரஃபேல் போர் விமானங்களின் விற்பனையை தடுப்பதற்காக சீனா பொய்ப் பிரசாரம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்படும் J35 விமானங்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ரஃபேல் விமானங்கள் அழிக்கப்பட்டதாக AI உதவியுடன் தயாரிக்கப்பட்ட படங்களை போலி கணக்குகள் மூலம் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.
ரஃபேல் விமானங்களை வாங்க இந்தோனேஷியா தயாராக இருந்த நிலையில் அதனை நிறுத்திவிட்டு தங்களது விமானங்களை வாங்குமாறு சீனா வற்புறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















