புதிய ராணுவ உடையின் வடிவமைப்புக்கான அறிவுசார் சொத்துரிமையை இந்திய ராணுவம் பெற்றது.
டிஜிட்டல் முறைப்படி அச்சிடப்பட்ட போர் சீருடையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் 2025 ஜனவரியில் புதிய கோட் காம்பாட் என்ற உடையையும் அறிமுகப்படுத்தியது.
இது, ராணுவத்தை நவீனமயமாக்குதல், உள்நாட்டு மயமாக்குதல் மற்றும் வீரர்களின் வசதியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கோட் காம்பாட் உடையை டெல்லியில் உள்ள தேசிய உடையலங்கார தொழில்நுட்ப நிறுவனம், ராணுவ வடிவமைப்பு துறையின் கீழ் வடிவமைத்து உருவாக்கியது.
இந்த மூன்றடுக்கு உடை, மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நிறுவனமும் இந்த வடிவமைப்பைத் தயாரிப்பது, நகல் எடுப்பது அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்துவது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
















