சிவகங்கை அருகே பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை 5 மாதங்களாகியும் பணிகள் நிறைவு பெறாததால் 5 கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.
காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட இலந்தமங்களம், சானாகுளம், மாங்காட்டுப்பட்டி உட்பட 5 கிராமங்களில் புதிதாகச் சாலை அமைக்கக் கடந்த ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 4 கோடியே 26 லட்சத்தி 672 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து, பழைய சாலையை அகற்றிவிட்டு புதிதாகச் சாலை அமைக்கப்பட்டதாகப் பதாகை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாலைகள் குண்டும், குழியுமாகக் காணப்படுவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலை மோசமாக இருப்பதால் வாகனங்கள் பழுதாகிவிடும் என்று அவசர காலத்தில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வர மறுப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் சாலையை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















