கோவை மாவட்டம் சூலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் சிசிடிவியில் பதிவானதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமமான ராவத்தூரில் கால்நடைகளை, சிறுத்தை வேட்டையாடுவதாகப் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில் அங்குள்ள தனியார் ஆலை வளாகத்தில், சிறுத்தை நடமாடிய காட்சி வெளியாகி உள்ளது.
இதனிடையே குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டுமெனக் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















