தெலங்கானாவில் ஒரே ஆட்டோவில் 23 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற நிலையில் போலீசார் ஆட்டோ பறிமுதல் செய்துள்ளனர்.
ஆட்டோவில் பயணிக்கும்போது பெரும்பாலும் 3 பெரியவர்கள் மற்றும் 5 சிறியவர்கள் ஏற்றப்படுவது வழக்கம்.
ஆனால் தெலங்கானா மாநிலம நாகர்கர்னூல் ஆபத்தை உணராமல் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் 23 பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருப்பது வைரலாகி உள்ளது.
ஆட்டோவில் அதிகளவில் குழந்தைகள் ஏற்றப்பட்டிருப்பதை கண்ட போக்குவரத்து காவலர் ஆட்டோவை நிறுத்திச் சோதனை செய்தபோது 23 மாணவர்கள் அதில் பயணித்தது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆட்டோவைப் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
















