கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் திமுக அரசு வேண்டுமென்றே தவறான கருத்தைப் பரப்பி வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்காகத் தமிழக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திமுக அரசு முழு கடிதத்தையும் வெளியிடாமல், வேண்டுமென்றே ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தவறான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்து, அதை மத்திய அரசு நிராகரித்ததாகத் திமுக மேற்கொண்ட முயற்சி கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசைக் குற்றஞ்சாட்டுவதை நிறுத்திவிட்டு, விரைவில் விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
















