கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,
கோவை, மதுரைக்கு 2026 ஜூன் மாதம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்றும் கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை, மாறாகத் திருப்பி அனுப்ப கூறப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான அறிக்கையைத் திருப்பி அனுப்ப மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
















