வெனிசுலாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஒரினோகோ பெல்ட் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள மிக முக்கியமான பகுதியில் தீப்பற்றி எரிந்தது.
மளமளவெனப் பரவிய தீயால் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
















