துரியன் பழத்தை தங்கள் நாட்டின் தேசிய பழமாக அறிவிக்க இந்தோனேசியாவும், மலேசியாவும் மல்லுக்கட்டி வருகின்றன… இரு நாடுகளிலும் துரியன் பழங்களின் உற்பத்தி கணிசமாக உள்ள நிலையில், இரு நாடுகளும் தங்களுக்கே சொந்தம் என அடித்துக் கொள்வது பேசு பொருளாகியுள்ளது.
பலாப்பழம் போன்று முட்கள் கொண்ட துரியன் பழங்கள் துர்நாற்றம் வீசினாலும், மனிதர்களுக்கு நம்ப முடியாத நன்மைகளை அளிக்கிறது. இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் துரியன் பழங்கள் நம் உடலுக்கு அளவற்ற நன்மைகளை அள்ளி வழங்குகின்றன… கால்சியம், மாங்கனீஸ், கரோட்டின், இரும்புச் சத்து, ரிபோப்ளேவின், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ் பொட்டாசியம், மக்னீசியம் என இன்னும் லிஸ்ட் நீளும் அளவுக்கு இதில் சத்துக்கள் புதைந்துள்ளன.
இதனால் துரியன் பழங்களை பழங்களின் ராஜா என்று வர்ணிக்கிறார்கள். இத்தனை பெருமை கொண்ட துரியன் பழங்களை தங்களது தேசிய பழமாக அறிவிக்க இந்தோனேசியாவும், மலேசியாவும் மல்லுகட்டி வருகின்றன… மலேசியா உடன் பரவலாகத் தொடர்புடைய துரியன் பழங்களை மலேசியர்கள், தேசிய புதையல் என்றே பெருமைப்பட்டு கொள்கிறார்கள்… முசாங் கிங் போன்ற விலைமதிப்பற்ற துரியன் வகைகளுக்குப் பெயர் போன மலேசியா, கலாச்சார பெருமை மற்றும் உலகளாவிய பிராண்டிங்கை உயர்த்த, துரியனை தேசிய பழமாக அறிவிக்க முனைப்பு காட்டி வருகிறது… அது என்ன நீ அறிவிக்கிறது.
துரியன் பழம் எங்கள் நாட்டின் தேசிய பழம் என வரிந்துகட்டி நிற்கிறது இந்தோனேசியா… நவம்பர் 18ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த இந்தோனேசியாவின் உணவு அமைச்சர் சுல்ஹாஸ், துரியனை தேசிய பழமாக அறிவிக்கும மலேசியாவின் முன்மொழிவை வெளிப்படையாக ஏற்கவில்லை. இந்தோனேசியாவில் துரியன் உற்பத்தி, மலேசியாவை விட அதிகம் என்பதை புள்ளிவிவரங்களுடன் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.. 2024ம் ஆண்டில் மட்டும் 2 மில்லியன் டன் துரியன் உற்பத்தி நடந்திருப்பதாகவும், இது மலேசியாவின் உற்பத்தியை விட அதிகம் என்றும் சொல்ல வேண்டுமா? இதனால்தான் துரியன் இந்தோனேசியாவின் சரியான தேசிய பழமாக மாறிய என்றும் சுல்ஹாஸ் விவரித்தார்.
இந்தோனேசியாவில் ஜாவா, சுமத்ரா, கலிமந்தன் மற்றும் சுலவேசி உள்ளிட்ட பல தீவுகளில் பரவலாக துரியன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு உற்பத்தி ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருகியுள்ளது. இங்குள்ள சாதகமான சூழ்நிலைகளால் உற்பத்தி தூண்டப்படுகிறது. துரியன் சாகுபடியில் இந்தோனேசியாவுடன் மலேசியாவுடன் ஒப்பிடும்போது, அதன் உற்பத்தி கணிசமாக இருந்தாலும், ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
இந்தோனேசியாவின் கருத்து, துரியனை அதன் தேசிய பழமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் மலேசியாவின் முயற்சியைச் சிக்கலாக்கியுள்ளது.அதே நேரத்தில் முசாங் கிங் போன்ற பிரீமியம் துரியன் வகைகளுக்குப் பெயர் பெற்றது, இது பழத்தின் ஏற்றுமதி வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது. மலேசியாவின் மொத்த உற்பத்தி புள்ளிவிவரங்கள் குறைவாக இருந்தாலும், நாடு அதன் சர்வதேச சந்தை வரம்பை, குறிப்பாகச் சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
ஏற்றுமதி வெற்றி பெற்ற போதிலும், இந்தோனேசியாவின் போட்டியால் துரியனை அதிகாரப்பூர்வ தேசிய பழ அந்தஸ்துக்கு உயர்த்துவதற்கான மலேசியாவின் முயற்சி ஒரு சவாலான விவாதத்தை எதிர்கொள்கிறது.
















