கோவை மாவட்டம் வால்பாறையில் ஆசிரியர்கள் மன ரீதியாகத் துன்புறுத்துவதாகக் கூறி தீக்குளித்த 9ம் வகுப்பு மாணவி, 40 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரொட்டிக்கடை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்து சஞ்சனா என்ற மாணவி, 9 வகுப்பு படித்து வந்தார். பள்ளி ஆசிரியர்கள் ரமணிபாய், சியாமளாதேவி, சிந்தியா ஆகியோர் தன்னை மனரீதியாகத் துன்புறுத்துவதாகக் கூறி, மாணவி முத்து சஞ்சனா, கடந்த அக்டோபர் மாதம் வீட்டில் மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்தார்.
மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் 40 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இதனிடையே மாணவி உயிரிழக்கும் முன் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் ஆசிரியர்கள் தன்னை மனரீதியாகத் துன்புறுத்தியதாக மாணவி வேதனையுடன் கூறியுள்ளார்.
















