போராட்டத்தின் போது அளித்த வாக்குறுதிகளை அமைச்சர் சிவசங்கர் நிறைவேற்ற வேண்டுமெனப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினரின் விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய, அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின்போது அமைச்சர் சிவசங்கர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மின்சார பேருந்து என்பது மறைமுகமாகத் தனியார்மயமாக்கும் முயற்சி எனவும் இப்பேருந்தை அரசே இயக்க வேண்டும் என அவர் கூறினார்.
















