புதுச்சேரி கடலோர பகுதிகளில் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் ஒத்திகை நடைபெற்றது.
2008ஆம் ஆண்டுக் கடல் வழியாக நுழைந்து மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், போலீசார் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக ஆண்டிற்கு இருமுறை சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி, புதுச்சேரி கடலோர காவல்படை சார்பில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமையில், காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தேங்காய்திட்டு துறைமுகப் பகுதிகள், வீராம்பட்டினம், பனித்திட்டு, காலாப்பட்டு வரை உள்ள மீனவ கிராம கடலோர பகுதிகள் மற்றும் முகத்துவார பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
2 நாட்கள் நடைபெறும் சாகர் கவாச் ஒத்திகையில் 500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
















