அமெரிக்கா சென்றிருந்த ரெனால்டோவுக்கு வெள்ளை மாளிகையின் தங்க சாவியை அதிபர் டிரம்ப் பரிசளித்தார்.
சவுதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்தில், போர்ச்சுகலை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்து கொண்டார்.
டிரம்ப்பும், இளவரசர் சல்மானும், இரு நாடுகளின் உயரதிகாரிகளிடம் பேசியபோது, ரொனால்டோ மிக அருகில் அமரத்தப்பட்டிருந்தார்.
பின், தனது இளைய மகன் பாரனுக்கு ரொனால்டோவை அதிபர் டிரம்ப் அறிமுகம் செய்து வைத்தார்.
தன் மகன் ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்றும், ரொனால்டோவை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததால், தன்னை பாரன் அதிகமாக மதிப்பார் என்றும் டிரம்ப் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையடுத்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ரொனால்டோவை வரவேற்ற டிரம்ப் அவருக்குப் பிரியாயா விடை அளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் தங்க சாவியை பரிசளித்தார்.
அதனை பெற்று கொண்ட ரொனால்டோ, தனக்கு வழங்கப்பட்ட கவுரத்திற்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
















