மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது என மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனோகர் லால் கட்டார், கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் மயமாக்குவது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளார்.
கோவைக்கான திட்ட அறிக்கையில் உள்ள 7 வழித்தடங்களில் போதுமான இடவசதிகள் கூட இல்லை எனக் கூறியுள்ள மனோகர் லால் கட்டார், சென்னையை விடக் குறைந்த நீளமுள்ள கோவை மெட்ரோ ரயில் பாதையில் அதிக பேர் பயணிப்பார்கள் எனத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில் சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு 63,246 கோடியில் ஒப்புதல் அளித்த பெருந்தன்மையை முதல்வர் ஸ்டாலின் மறந்துவிட்டார் என கூறியுள்ள மனோகர் லால் கட்டார், 10,000 மின்சார பேருந்துகளை வழங்கும் பிரதமரின் திட்டத்திலும் இணைய தமிழக அரசு மறுக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
















