தாம்பரம் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் ஊசி போடுவதற்கான அறையை தவறாகக் காண்பித்த காவலாளியின் விரலை கடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னா என்பவர் தனது மகளுக்கு உடல் நிலை சரி இல்லாததால் ஊசி போடுவதற்கான இடம் எங்கே உள்ளது எனக் காவலாளி அம்பிகாபதியிடம் கேட்டுள்ளார்.
அப்போது அறையை தவறாகக் காட்டியதாக கூறி கைகலப்பில் ஈடுபட்ட சின்னா, காவலாளியின் விரலைக் கடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
















