சென்னை, மந்தைவெளியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அருகிலிருந்தவர்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் சரளா என்பவரது வீட்டின் பூஜை அறையில் திடீரெனத் தீப்பற்றியுள்ளது.
சரளா வீட்டில் இல்லாத நேரத்தில் தீ விபத்து நிகழ்ந்ததால், அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
மேலும், வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரை வெளியே எடுத்துச் சென்று பெரும் அசம்பாவிதம் நிகழாமல் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் பூஜை அறையில் ஏற்றப்பட்ட விளக்கினால் வீட்டில் தீப்பற்றியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீ விபத்துகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















