அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மூத்த மகனும், தொழிலதிபருமான டொனால்ட் டிரம்ப் ஜூனியர், தனது மனைவியுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார்.
ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற உள்ள அமெரிக்க பணக்காரரின் மகனுடைய திருமண விழாவில் பங்கேற்பதற்காக டொனால்ட் டிரம்ப் ஜூனியர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
அவருடன் 40 நாடுகளைச் சேர்ந்த 126 சிறப்பு விருந்தினர்களும் வந்திருந்தனர். இந்தச் சுற்றுப்பயணத்திற்காக ஆக்ராவில் வந்திறங்கிய டிரம்ப் ஜூனியர், தாஜ்மஹாலில் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.
பின்னர் அங்குத் தனது மனைவி வனேசா டிரம்புடன் புகைப்படம் எடுத்துக்க்கொண்ட அவர், அங்கிருந்து ஜாம்நகருக்கு புறப்பட்டார்.
கடந்த 2020ல் டிரம்புக்கு வழிகாட்டியாக இருந்த நிதின் சிங்தான், இந்தச் சுற்றுப்பயணத்தில் அவரது மகனுக்கும் வழிகாட்டியாகச் செயல்பட்டார். மேலும், டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் வருகைக்காகத் தாஜ்மஹாலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
















