இந்தியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர்கள் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய நியமனக் கடிதங்கள், வேலைப் பாதுகாப்பு மற்றும் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்கின்றன.
அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு மற்றும் பிற சமூக பாதுகாப்பு சலுகைகள் கிடைக்கவும் வழிவகை செய்கின்றன. அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியம், சரியான நேரத்தில் ஊதியமும் நிதிப் பாதுகாப்பையும் புதிய சட்டங்கள் உறுதி செய்கின்றன.
மேலும் இந்த புதிய சட்டம் மூலம் சாலையோர தொழிலாளர்கள் முதன்முறையாக சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
















