டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர் நபி, துருக்கியில் 20 நாட்கள் தங்கியிருந்து பயங்கரவாத அமைப்பினரை சந்தித்து பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு உமர் நபி துருக்கி சென்று, அங்குள்ள பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து பேசியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இப்பயணத்தின் போது உமருடன், முஷாம்மில் ஷாகீல் கனாய் மற்றும் கைது செய்யப்பட்ட அதீல் அகமது ராதரின் சகோதரர் முஷாபர் ராதர் ஆகியோரும் சென்றுள்ளனர். இந்த சந்திப்பை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உகாஷா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
















