சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி மெளலி கடந்த 20ம் தேதி மந்தவெளி ரயில்வே பாலம் அருகே 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கௌதம், நிரஞ்சன் ஆகியோரை கைது செய்தனர்.
அடையாறு இந்திரா நகர் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால், விஜயகுமார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜயகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ரவுடி தாக்கியதில் காயமடைந்த மயிலாப்பூர் காவல் நிலைய காவலர் தமிழரசன் மற்றும் ரவுடி விஜயகுமார் ஆகியோர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
















