IND v/s PAK - ஆர்மேனியாவுடன் Su-30MKI போர் விமான ஒப்பந்தத்தை விரைவுபடுத்திய இந்தியா!
Jul 29, 2026, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

IND v/s PAK – ஆர்மேனியாவுடன் Su-30MKI போர் விமான ஒப்பந்தத்தை விரைவுபடுத்திய இந்தியா!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 22, 2025, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் தனது உள்நாட்டுத் தயாரிப்பான JF-17C Block-III போர் விமானங்களை அஜர்பைஜானுக்கு விற்பனை செய்துள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா, அர்மேனியாவுடன் பல பில்லியன் டாலர் மதிப்பிலான Su-30MKI போர் விமான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தியுள்ளது.

2020 மற்றும் 2023 நாகோர்னோ-கராபாக் மோதல்களில் அசர்பைஜானிடம் அடைந்த தோல்விகளுக்குப் பிறகு, ராணுவ சமநிலையற்ற தன்மையைக் குறைக்க அர்மேனியா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவுடனான Su-30MKI போர் விமான ஒப்பந்தத்திற்கு அர்மேனியா முனைந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இது அர்மேனியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ராணுவக் கொள்முதலாக இருக்கும். அர்மேனியாவுக்கு Su-30MKI விமானங்கள் 2027ம் ஆண்டு முதல் விநியோகிக்கப்படலாம் என்றும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அர்மேனியாவின் தேவைக்கேற்ப பிரத்யேகமான ஏற்றுமதி வகையை தயாரிக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அஜர்பைஜானின் JF-17 விமானங்களை எதிர்கொள்ளும் வகையில், அர்மேனியாவிற்கான Su-30MKI போர் விமானங்கள் அதிநவீன அம்சங்களுடன் வரவுள்ளன. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான உத்தம் AESA ரேடார், பார்வைக்கு அப்பாற்பட்ட தாக்குதல் திறன் கொண்ட அஸ்திரா ஏவுகணைகள் மற்றும் அதிநவீன மின்னணுப் போர் சூட்களும் இதில் அடங்குகின்றன. இந்த ஒப்பந்தம் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: pakistanAzerbaijanArmeniaJF-17C Block-III fighter jetsSu-30MKI fighter jet deal
ShareTweetSendShare
Previous Post

எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் தேஜஸ் Mk2 விமானத்தில் புதிய ரேடார்!

Next Post

சென்னை மயிலாப்பூரில் தலைமறைவாக இருந்த ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies